டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு 10-உத்தரவாதங்களை வழங்கியுள்ளார். அதில், இலவச மின்சாரம், 24மணி நேர குடிநீர் வசதி, மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும், குடிசை வாசிகளுக்கு வீட்டு வசதி, சுத்தமான சுற்றுச்சூழல் உள்ளிட்ட அம்சங்களை ஏற்படுத்தி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, இது எங்கள் தேர்தல் அறிக்கை அல்ல. அதற்கு இரண்டு மடங்கு மேலானது. இவை டெல்லி மக்களை பாதிக்கும் பிரச்சினைகள். இந்த உத்தரவாதங்கள் அவை குறித்தே உள்ளது.
200 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் மற்றும் 20,000 லிட்டர் தண்ணீர் இலவசம் என்று அறிவித்துள்ளார். இந்த இரண்டு சிக்கல்களும் அந்த கட்சிக்கு பரந்த ஆதரவைக் பெற்றுக் கொடுக்கும் என ஆம் ஆத்மி நம்புகிறது.
மேலும், நகரத்தில் அரசால் நடத்தப்படும் பள்ளியில் மறுசீரமைப்பு செய்வது வெற்றிகரமான முன்னெடுப்பாக இருக்கும் என்று ஆம் ஆத்மி கட்சி நம்புகிறது.